பள்ளியில் ரூ.20 லட்சத்தில் ஆய்வகம்!!!

பனமரத்துப்பட்டி: அரசு பள்ளியில், நவீன ஆய்வகத்துக்கு கட்டடம் கட்ட, எம்.எல்.ஏ.,விடம் நிதி கேட்டு, மனு அளிக்கப்பட்டது. பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், இலவச மடிக்கணினி
வழங்கும் விழா, நேற்று முன்தினம் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். வீரபாண்டி எம்.எல்.ஏ., மனோண்மணி, 162 மாணவ, மாணவியருக்கு, விலையில்லா மடிக்கணினி வழங்கினார். இதையடுத்து, ’மத்திய அரசு, 20 லட்சம் ரூபாய் மதிப்பில், நவீன ஆய்வகம் அமைக்க, நமது பள்ளியை தேர்வு செய்துள்ளது. அதற்கு தேவையான கருவி, உபகரணம் வழங்கப்பட உள்ளது. ஆனால், ஆங்கில வழிக்கல்விக்கு, கூடுதல் வகுப்பறை கட்ட, நிதி ஒதுக்க வேண்டும்’ என, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு அளித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...