மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி திரு.மு.பழனிசாமி அவர்களின் அறிக்கை - 25-10-2017

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்காக  சில சமயங்களில்
தனியாரிடம் பணம் கடன் வாங்குகின்றனர். இதனைப் பயன்படுத்தி கடன் கொடுத்தவர்கள் கடன் வாங்கியவர்களை சட்டத்திற்கு புறம்பாக அதிக வட்டி கேட்டு வற்புறுத்துகின்றனர்.

இத்தகைய அதிக வட்டி வசூலிக்கும் தனியரிடமிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக மாண்புமிகு  புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2003 ஆம் ஆண்டு """"தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டம் 2003"" என்ற சட்டத்தை கொண்டு வந்தார்கள்.   இந்தச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

இந்தச்  சட்டத்தின் மூலம்  மக்களிடமிருந்து அதிக வட்டி வசூல் செய்பவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை  செய்யப்பட்டுள்ளது.

  வட்டிக்கு பணம் பெற்றவர்கள், தாங்கள் பெற்ற தொகையை நீதிமன்றத்தின் மூலம் செலுத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதீத வட்டி வசூல் செய்பவர்கள் தங்களிடம் பணம் பெற்றவர்களிடமிருந்து  சட்டத்திற்கு புறம்பாக அவர்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கைப்பற்றியிருந்தால், அதனை மீட்டு அவர்களிடமே ஒப்படைக்கச் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

இதுபோன்று, அதீத வட்டி வசூல் செய்பவர்களிடமிருந்து மக்களை காப்பாற்ற பல் அம்சங்கள் இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

மாண்புமிகு அம்மாவின் ஆசியுடன் செயல்படும் இந்த அரசும்  அதீத வட்டி வசூல் செய்பவர்களிடமிருந்து பொது மக்களை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 மாண்புமிகு அம்மாவினால் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடை  சட்டம் 2003-ன்  அடிப்படையில் அதீத வட்டி சம்பந்தமாக மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கையை துரிதமாக எடுக்கும்படி நான்  மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.  

எனவே   பாதிக்கப்பட்ட பொது மக்கள்  எந்தவிதமாக அச்சத்திற்கும் ஆளாகாமல், சம்பந்தப்பட்ட  மாவட்ட ஆட்சியரையும்,  காவல்துறை அதிகாரிகளையும் அணுகி, தக்க நிவாரணம் பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  


          மு.பழனிசாமி
                                                           தமிழ்நாடு  முதலமைச்சர்


வெளியீடு : - இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...