தண்டையார்பேட்டை: 25 சதவீத போனஸ் கேட்டு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சென்னையில் 4 இடங்களில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படும் 21 சதவீத போனசை திருத்தப்பட்ட சம்பள அடிப்படையில் 25 சதவீதமாக வழங்கக் கோரி அனைத்து கட்சி சார்பில், போக்குவரத்து தொழிலாளர்கள் பெரம்பூர் மாநகர போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நடத்துனர் சங்க செயலாளர் வெங்கடேசன், ஓட்டுநர் சங்க பொருளாளர் ராமு தலைமை வகித்தனர்.
வியாசர்பாடி பஸ் பணிமனை ஊழியர்கள் 50 பேர், தொமுச இணை செயலாளர் தங்கராஜ் தலைமையில் போனஸ் உயர்வு கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். முல்லைநகர் பஸ் பணிமனை முன்பு தொமுச சங்க நிர்வாகி பிரகாஷ் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுபோல், தண்டையார்பேட்டை மாநகர போக்குவரத்து பணிமனை அருகே தொமுச சங்க நிர்வாகி அங்கப்பன் தலைமையில் 60க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள், 25 சதவீத போனஸ் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், நஷ்டத்தில் இயங்குவதாக கூறி ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை அரசு மறுத்து வருகிறது. குறிப்பாக, நிதி நெருக்கடியை சமாளிக்க, மாதந்தோறும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை நிர்வாகம் பிடித்துக்கொள்வதாக புகார் எழுந்தது.அந்த வகையில், போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 66,000 தொழிலாளர்களின் பணப்பலன்கள் ரூ.1,139 கோடியை அரசு அவர்களிடம் வழங்காமல் பிடித்து வைத்துள்ளது. இந்நிலையில், பிடித்தம் செய்த ரூ.1,139 கோடியை உடனே வழங்க கோரி போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் சென்னை பல்லன் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பல மாவட்டங்களை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. காலை 10.30 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஆர்ப்பாட்டம் நடந்தது.