குறைந்தபட்ச இன்டர்நெட் வேகத்தை 2 எம்.பி.பி.எஸ்., ஆக மாற்ற முடிவு

இந்தியாவில் குறைந்தபட்சம் இன்டர்நெட் வேகத்தை 2 எம்.பி.பி.எஸ்
ஆக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொழிற்நுட்ப வளர்ச்சி காரணமாக இன்டர்நெட் பயன்பாட்டின் தேவை அதிகமாகி வருகிறது. நாளுக்குநாள் இன்டர்நெட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் அதிகரித்து வருகின்றனர். மத்திய அரசும் இணைய வழியிலான பணபரிவர்த்தனையையே பரிந்துரைக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் குறைந்தபட்ச இன்டர்நெட் வேகத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து தொலைதொடர்பு செயலர் அருணா செளந்திரராஜன் கூறுகையில் :‛‛ நாட்டில் பல இடங்களில் குறைந்த வேகத்திலான இணையதள சேவை மட்டுமே கிடைப்பது குறித்து அரசு கண்காணித்து வருகிறது. நாட்டில் இன்டர்நெட்டிற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் அதன் வேகம் குறைவாக இருக்கிறது.தொலைதொடர்பு ஒழுங்கை நிர்வாகிக்கும் டிராய் நிறுவனம் இந்தியாவில் 512 கே.பி.பி.எஸ். என்ற குறைந்தபட்ச அளவை 2 எம்.பி.பி.எஸ். வேகத்திற்கு மாற்றவேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
மேலும் வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவை வழங்குபவர்கள் தாங்கள் செய்யும் விளம்பரங்களை விட குறைந்த பட்ச அளவையே வாடிக்கையகாளர்களுக்கு வழங்குகின்றனர். இதையும் கண்காணித்து வருகிறோம்.
மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ வந்த பின்பு மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களும் குறைந்தபட்ச இன்டர்நெட்டின் வேகத்தை அதிகாரிக்க கோரியுள்ளனர்.
அதன் படி குறைந்தபட்ச வேகத்தை 4 மாடங்களாக உயரத்தி 2 எம்.பி.பி.எஸ். ஆக மாற்ற உயர்த்த திட்டமிட்டுள்ளோம். '' என கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...