டிச.,31க்குள் ஆர்கே நகர் இடைத்தேர்தல்!!!

புதுடில்லி: ஆர்கே நகர் தொகுதியில் வரும் டிச.31ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் எ
ன தேர்தல் கமிஷனர் ஏகே ஜோதி அறிவித்துள்ளார்.

ரத்து

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்கே நகர் தொகுதி காலியாக உள்ளது. கடந்த ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. தினகரன், மதுசூதனன் உள்ளிட்ட 62 பேர் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், அதிகளவு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

ஆர்கே நகர்

இந்நிலையில், டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் ஏகே ஜோதி, ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் எனக்கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...