32 மாவட்டங்களில் இன்று ஜாக்டோ - ஜியோ கூட்டம்!!!

தமிழக அரசின் ஊதிய உயர்வு ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து, ஜாக்டோ - ஜியோ சார்பில்,
இன்று(அக்.,20) தமிழகம் முழுவதும், 32 மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் விளக்க கூட்டம் நடக்கிறது.


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு கேட்டு, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்றம் தலையிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. தொடர்ந்து, நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிப்படி, தமிழக அரசின் சார்பில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு, ஆசிரியர், அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று 32 மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன் விளக்க கூட்டம் நடத்தப்பட உள்ளது. 'ஊதிய உயர்வு ஏமாற்றம்' என்ற தலைப்பில், இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இதையடுத்து, வரும் 23ம் தேதி நீதிமன்றத்தில் ஊதிய உயர்வின் குளறுபடிகள் மற்றும் ஜாக்டோ - ஜியோ கோரிக்கை குறித்து முறையிடவுள்ளது. அதன் பின், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...