400 மாணவியர் படிக்கும் பள்ளியில் ஒரு கழிப்பறை கூட இல்லை!!!

கயா, பீஹாரில், 400க்கும் அதிகமான மாணவியர்
படிக்கும் அரசு பள்ளியில், ஒரு கழிப்பறை கூட இல்லாதது, தெரிய வந்து உள்ளது.


பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. நாட்டில், திறந்தவெளி கழிப்பிடங்களே இல்லாத நிலையை ஏற்படுத்த, பிரதமர் மோடி விரும்புகிறார். 'துாய்மை இந்தியா' திட்டத்தில், கழிப்பறைகள் கட்ட, அனைவருக்கும் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், பீஹாரில், 400க்கும் அதிகமான மாணவியர் படிக்கும், அரசு பள்ளியில், ஒரு கழிப்பறை கூட இல்லாதது தெரிய வந்துள்ளது. கயாவில், அரசு நடத்தும், குருநானக் நடுநிலை பள்ளியில், 400க்கும் அதிகமான மாணவியர் மற்றும், 200க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்தப் பள்ளியில், ஒரு கழிப்பறை கூட கட்டப்படவில்லை. இதனால், இயற்கை உபாதையை கழிக்க, தங்கள் வீட்டுக்கோ அல்லது அருகில் உள்ள தெரிந்தவர் வீடுகளுக்கோ, மாணவர்களும், மாணவியரும் செல்ல வேண்டிஉள்ளது.

இது பற்றி, ஆசிரியை புனாமி குமாரி கூறியதாவது:கழிப்பறை இல்லாதது பற்றி, கயா மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை, மாணவர்கள் சார்பிலும், ஆசிரியர்கள் சார்பிலும் புகார் செய்துவிட்டோம். விரைவில் கட்டித்தருவாக அதிகாரிகள் ஒவ்வொரு முறையும், உறுதியளிக்கின்றனர்; ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...