ஏர்டெல்: 50 ஜி.பி. டேட்டா சலுகை!

தீபாவளியை முன்னிட்டு ஏர்டெல் நிறுவனம் 50 ஜி.பி. அளவிலான டேட்டாவை இலவசமாக

வழங்கும் புதிய திட்டம் ஒன்றை தனது போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்புச் சேவை நிறுவனமான ஏர்டெல், சமீப காலமாகவே வருவாய் இழப்பைச் சந்தித்து வருவதோடு, தனது நீண்ட நாள் வாடிக்கையாளர்களையும் இழந்து வருகிறது. அதற்குக் காரணம், முதலில் இலவசமாகவும் பின்னர் குறைந்த கட்டணத்திலும் தொலைத் தொடர்புச் சேவைகளை வழங்கிவரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமேயாகும். தினசரி 1 ஜி.பி. அளவிலான டேட்டாவை வழங்கி வருவதால் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், சந்தையில் ஜியோவுடனான போட்டியை வலுப்படுத்தவும் ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றைத் தீபாவளியை முன்னிட்டு அறிவித்துள்ளது.

‘மை பிளான் இன்ஃபினிட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ள, போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கான இந்தத் திட்டத்தில் 999 கட்டணத்தில் 50 ஜி.பி. அளவிலான டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், வரம்பற்ற அழைப்புகளை லோக்கல் மற்றும் எஸ்.டி.டி.யில் மேற்கொள்ளலாம் என்பதோடு ரோமிங் கட்டணமும் இத்திட்டத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஜியோ போல தினசரி 1 ஜி.பி. டேட்டாவை மட்டுமே பயன்படுத்த இயலும் என்ற கட்டுப்பாடு இல்லை என்பதால் இத்திட்டம் ஏர்டெல் வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...