தமிழகத்தில் 5.95 கோடி வாக்காளர்கள்!!

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல்
வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டனர்.

வரைவு வாக்காளர் வெளியீடு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது: தமிழகத்தில் 5,95,88,002 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆண்கள்: 2,94,84,392
பெண்கள் : 3,00,98,268
3ம் பாலினத்தவர்கள்: 5,242 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அதிகமாக சோழிங்கநல்லூர் தொகுதியில், 6,24,405 வாக்காளர்களும், குறைவாக, கீழ்வேளூர் தொகுதியில் 1,68,275 வாக்களர்களும் உள்ளனர்.
சோழிங்கநல்லூர் தொகுதியில் பெண் வாக்காளர்களும் அதிகமாக உள்ளனர். பட்டியலில், 3,10,542 பெண் வாக்காளர்கள் உள்ளனர். திருநங்கைகள் அதிகமாக மதுரவாயல் தொகுதியில் 130 பேர் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை:

சென்னையில் வாக்காளர் வரைவு பட்டியலை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டார்.
மொத்தம்: 4073703
ஆண்கள்: 20,59,557
பெண்கள்: 20,59,557
3ம் பாலினம்: 978

மதுரை:

மதுரையில் வாக்காளர் பட்டியலை கலெக்டர் வீரராகவ ராவ் வெளியிட்டார்.
மொத்தம்: 25,57,278
ஆண்கள்: 12,64,343
பெண்கள்: 12,92,765
3ம் பாலினத்தவர்: 120

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...