ரூ.5 ஆயிரம் கோடியில் சசிகலாவின் மாஸ்டர் பிளான்??

ரூ.5 ஆயிரம் கோடியில் சசிகலாவின் மாஸ்டர் பிளான்!


ஜெயிலிலிருந்து பரோலில் வந்த சசிகலா, சில நோக்கங்களையும் காரியங்களையும் முடிந்தளவு நிறைவேற்றிவிட்டுத்தான் மீண்டும் ஜெயிலுக்குள் போயிருக்கிறார்.
தனது நெருங்கிய உறவு வட்டாரத்திடம் பேசிய சசிகலா, ""தினகரன் ஏகப்பட்ட தவறுகள் செய்திருந்தாலும், கட்சியினருடன் நெருக்கமாக இருப்பது அவர்தான். இனிமேல் எனது உத்தரவுப்படி சரியாக நடந்துகொள்ளும்படி தினகரனிடம் சொல்லிவிட்டேன். ஆட்சியின் பலாபலன்களை அனுபவிக்கத்தான் மந்திரிகளும் எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பின்னால் இருக்கிறார்கள். அதேநேரம் இரட்டை இலை அவர்கள் கைக்குப் போய்விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

சின்னம் இருக்கும் பக்கம்தான் தொண்டர்களும் இருப்பார்கள். எனவே ஆட்சியைக் கலைத்து, இப்போதைக்கு இரட்டை இலையையும் முடக்க வேண்டும்.

எம்.எல்.ஏ.க்கள் எத்தனை கோடி கேட்டாலும் அதைக் கொடுத்து, வளைக்க வேண்டும். இதற்காக ஐயாயிரம் கோடி செலவானாலும் பரவாயில்லை. எதிர்க்கட்சிகள் தரப்பிலும் பேசி ஆட்சியைக் கலைக்க ஏற்பாடு செய்யுங்கள். யாரிடமும் அதிகாரத் தோரணையில் பேசாதீர்கள்'''என மாஸ்டர் பிளான் ஒன்றைப் போட்டுக் கொடுத்துவிட்டுத்தான் சசிகலா சென்றுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...