7,000 ஊழியர்களின் மனைவியருக்கு 'ஹெல்மெட்' வழங்கிய வைர வியாபாரி!!

சூரத்:குஜராத் மாநிலம், சூரத் நகரில் பிரபலமான வைர வியாபாரி,
7,000 ஊழியர்களின் மனைவியருக்கு, தீபாவளி பரிசாக, 'ஹெல்மெட்' வழங்கி உள்ளார்.குஜராத் மாநிலத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, சூரத் நகரில், பிரபல வைர வியாபாரி, சாவ்ஜி டோல்கியா. ஆண்டுதோறும், தீபாவளி பண்டிகையின்போது, தன்னுடைய வைர நிறுவனத்தில் பணிபுரியும், ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக, வீடு, கார், விலையுயர்ந்த பொருட்கள் என வழங்குவது வழக்கம்.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், தன்னுடைய ஊழியர்களுக்கு, 400 வீடுகள் மற்றும், 1,260 கார்களை தீபாவளி போனசாக வழங்கினார். அதற்காக, 51 கோடி ரூபாய் செலவிட்டார்.இந்த ஆண்டு, தீபாவளி போனசாக, தன்னிடம் பணிபுரியும், 7,000 ஊழியர்களின் மனைவியருக்கு, 'ஹெல்மெட்' பரிசாக வழங்கியுள்ளார்.இதுகுறித்து டோல்கியா கூறியதாவது:ஊழியர் ஒருவர், தன் மனைவியை, இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்ற போது, விபத்தில் சிக்கினார்.

அந்த ஊழியர், ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர் பிழைத்தார். ஆனால், பின்னால் அமர்ந்து சென்ற, அவரது மனைவி, கீழே விழுந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.எனவே, பெண்களை பாதுகாக்க, பரிசாக, ஹெல்மெட் வழங்க முடிவு செய்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...