7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு!!

நாளை நடக்க இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று அரசு ஊழியர்களுக்கு 20 முதல்
25 சதவீதம் அளவில் சம்பள உயர்வு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 7-வது சம்பள உயர்வு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் வழங்கும் வகையில் ஊதியக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அதன் தலைவரான சண்முகம் கடந்த மாதம் 27-ந்தேதி ஊதியக்குழு பரிந்துரைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.

குழுவின் பரிந்துரைகளை அரசாணைகளாக வெளியிடும் பணிகள் நிதித்துறையில் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. பரிந்துரைகளை ஏற்பது தொடர்பான கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடக்கிறது. முதல்-அமைச்சருடன் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், நிதித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து விளக்கி கூறுகிறார்கள்.

அதனை தொடர்ந்து நாளை நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் 7-வது ஊழியக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அதற்கான அரசாணை நாளையே வெளியாக வாய்ப்பு உள்ளது.

இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு 20 முதல் 25 சதவீதம் அளவில் சம்பள உயர்வு இருக்கும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 1-7-2017 முதல் நிலுவை தொகையை வழங்க முடிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. சம்பள உயர்வுக்கான அறிவிப்பு நாளை அல்லது ஓரிரு நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...