ஆதார் குளறுபடி: 800 குடும்பத்தினருக்கு ஒரே பிறந்த தேதி!!


குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டைகளில், ஒரே பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 800

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்த, 800 குடும்பத்தினருக்கு, சமீபத்தில் ஆதார் அட்டை வழங்கும் பணி தனியார் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆதாரங்களைக் காட்டி இவர்கள் அனைவரும், ஆதாருக்காக பதிவு செய்தனர். ஆதார் அட்டை வழங்கப்பட்டபோது, அனைவருக்கும், ஜனவரி, 1ம் தேதி பிறந்த தேதியாக குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டு, அனைவரும், அதிர்ச்சி அடைந்தனர்.

பிறந்த ஆண்டாவது சரியாக இருக்கிறதா என்றால், அதிலும் குழப்பம். மூன்று பேரன்கள் உள்ள பாட்டிக்கு, 22 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பால்வாடி பள்ளியில் சேர்ந்துள்ள குழந்தைக்கு, 60 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை வழங்கும் ஆதார் ஆணையத்தின் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறியதாவது: ஆதார் பெறும்போது, சரியான பிறந்த தேதியை குறிப்பிடாதபோது, அவர்களுடைய பிறந்த தேதியை, ஜனவரி, 1 என்று குறிப்பிடுவோம். ஆனால், ஒட்டு மொத்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாக, இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ள தனியார் அமைப்பிடம் விசாரிக்க உள்ளோம். தவறு திருத்தப்பட்டு, புதிய ஆதார் அட்டை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...