அரசு பள்ளிக் கட்டடம் இடிந்து விபத்து! ஆசிரியர் மற்றும் மாணவர்கள் காயம்!!!

மழையால் அரசுப் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில்
மாணவர்களும் ஆசிரியர்களும் காயமடைந்துள்ளனர்.

தமிழக அரசின் 2014-2015 கணக்கெடுப்பின்படி அரசு ஆரம்ப பள்ளிகள் 23928, நடுநிலைப் பள்ளிகள் 7260, உயர்நிலைப் பள்ளிகள் 3044, மேல் நிலைப் பள்ளிகள் 2727, இருப்பதாகத் தெரியவந்தது. இதில், அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் பல அரசுப் பள்ளிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் மூடப்பட்டுள்ளன. பல பள்ளிகள் கட்டட வகுப்பறை இல்லாமலும் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலும் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள் மரத்தடி, சாலைகளில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்படுகிறது.. இது தவிர மழைக் காலம் என்றாலே அரசுப் பள்ளிகளின் கட்டடம் குறித்து சொல்லவே வேண்டாம். மழைக் காலங்களில் பள்ளிகளின் சுவர் இடிந்து மாணவர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே தற்போது பெய்து வரும் மழைக்கே தமிழக அரசுப் பள்ளி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது..

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சேம்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி கடந்த 1952ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1 முதல் 5ஆம் வகுப்பு முதல் உள்ள இந்தப் பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.

இப்பள்ளியின் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.கடந்த சில தினங்களாகப் பெய்த தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் நேற்று (அக் 3) இடிந்து விழுந்தது. கட்டடத்தின் மேல் கூறையில் உள்ள ஓடுகள் உடைந்து விழுந்ததில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மழையின் போது மின்சார கசிவால் தீ விபத்து ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால் இதுவரை மின்சார இணைப்பு செய்து தரவில்லை என்று அப்பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள சேதமடைந்த அரசுப் பள்ளிகளை ஆய்வு நடத்தி சீர் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...