குறைவான ஓட்டுப்பதிவு பகுதிகளில் கள ஆய்வு நடத்தும் தேர்தல் கமிஷன்!!!

சட்டசபை தேர்தலில், 50 சதவீதத்திற்கும் குறைவாக ஓட்டுப்பதிவு
நடந்த, ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில், 100 சதவீத வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணி மேற்கொள்ள, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இடம் மாறி சென்றவர்களின் பெயர், அதிக அளவில் நீக்கப்படாமல் உள்ளது.

ஓட்டுச் சாவடிகள்

இடம் மாறி செல்வோர், அந்த முகவரியில், வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்கின்றனர்; பழைய இடத்தில் உள்ள, பெயரை நீக்குவது இல்லை. இதனால், வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. ஒன்றுக் கும் மேற்பட்ட இடங்களில் உள்ளவர்களின் பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்க, தேர்தல் கமிஷன் முயற்சி மேற்கொண்டு உள்ளது.

ஒரு பகுதியாக, சட்டசபை தேர்தலில்,
ஒவ்வொரு தொகுதியிலும், 50 சதவீதத்திற்கும் குறைவாக ஓட்டுப்பதிவு நடந்த, இரண்டு ஓட்டுச் சாவடிகளை தேர்வு செய்து, வீடு, வீடாக, 100 சதவீத கள ஆய்வு நடத்த, தேர்தல் கமிஷன் உத்தர விட்டு உள்ளது.சென்னையில், சோதனை ரீதியாக, 25 சதவீதத்திற்கும் குறைவாக, ஓட்டுப் பதிவு நடந்த, 10 ஓட்டுச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தபகுதிகளில், வருவாய் துறை அலுவலர்கள், வீடு வீடாக செல்கின்றனர்.

விபரம் சேகரிப்பு

வாக்காளர், குறிப்பிட்ட முகவரியில் உள்ளாரா, இடம் மாறி சென்றுள்ளாரா, இறந்துள்ளாரா,
சட்டசபை தேர்தலில் ஓட்டளித்தாரா என்பது போன்ற விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
ஆய்வு முடிவில், இறந்தவர்கள், இடம் மாறி சென்றவர்கள் பெயரை நீக்கப்பட உள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை பார்த்து, மற்ற பகுதிகளில், கள ஆய்வு நடத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

வாக்காளர் சேர்ப்பு: நாளை
சிறப்பு முகாம்

தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடி களிலும், நாளை, வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி விரும்பு வோர், அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். பெயர் சேர்க்கும் விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி, வயது சான்று சமர்ப்பிக்க வேண்டும். 25 வயதிற்கு கீழ் உள்ள மனுதாரர்கள்,வயது சான்றிதழை கண்டிப்பாக அளிக்க வேண்டும்.'ஆன் - லைனில்' விண்ணப்பிக்க விரும்புவோர், www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.

2018 ஜன., 1ல், 18 வயது நிறைவடைவோரும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர் களும், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், 18 - 25 வயதிற்கு உட்பட்டோர் தவிர, மற்றவர்கள், தங்களுடைய முந்தைய முகவரி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் ஆகியவற்றை, படிவத்தில் குறிப்பிட வேண்டும்.

'இருப்பிட மாற்றம் செய்யாமலிருந்தால், தற்போதைய முகவரியில் வசித்து வரும் கால அளவையும், முன்னர் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க இயலவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி,ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...