பண்டைய வேதங்கள், வேதாந்தம் ஆகியவற்றை கற்றுத் தரும், பிரத்யேக
கல்லுாரியை அமைக்க, கேரளாவின், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு ஆலோசித்து வருகிறது.
கேரளாவில், புகழ் பெற்ற அய்யப்பன் கோவில் உட்பட, 1,248 கோவில்களை நிர்வகிக்கும் வாரியமாக, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு திகழ்கிறது. இதன் தலைவர், பிரயார் கோபாலகிருஷ்ணன், திருவனந்தபுரத்தில் நேற்று கூறியதாவது: திருவனந்தபுரத்தில், வேதங்கள், வேதாந்தம் உள்ளிட்டவற்றை போதிக்கும் வகையில், பிரத்யேக கல்லுாரியை உருவாக்க திட்டமிட்டு வருகிறோம். இந்த கல்லுாரியில், பண்டைய கலாசாரம், குருகுல முறையில் போதிக்கப்படும்.
பழங்காலத்தில், நாளந்தா, தட்சசீலம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த கல்வி மையங்கள் போன்று, புதிய கல்வி மையத்தை உருவாக்குவோம். மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் உள்ள விவேகானந்தா பல்கலையுடன் சேர்ந்து, இத்திட்டம் செயல்படுத்தப்படும். தேசிய கண்ணோட்டத்துடன், இந்த கல்வி மையம் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.