உயர் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளின் நகல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைவில்
கொடுக்கப்பட வேண்டும் என்றும், தீர்ப்புகள் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
கேரள உயர் நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தில் நேற்று (அக்டோபர் 28) பங்கேற்றார் குடியரசுத் தலைவர். வைரவிழாவைத் தொடக்கி வைத்து அவர் பேசுகையில், “உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், தொடர்புடையவர்களுக்குத் தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகுதான் அதன் பலன் செயல்படுத்தப்படுகிறது. எனவே தீர்ப்பின் நகலை தாமதப்படுத்தாமல் விரைவாக அதாவது, தீர்ப்பு வழங்கப்பட்ட 24 மணி நேரத்திலிருந்து 26 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்டவருக்குத் தீர்ப்பின் நகல் வழங்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இன்னொரு முக்கிய அம்சமாக... “நம்நாடு பல்வேறு மொழி பேசும் மக்களைக் கொண்டிருக்கிறது. உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருப்பதால் மனுதாரர்களுக்குப் புரியாமல் போய்விடும் வாய்ப்புகள் உள்ளன. தீர்ப்பு விவரங்களை அறிய வழக்கறிஞர்களை நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனவே, தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளிலும் மொழிபெயர்த்துக் கொடுக்கும்போது ஆங்கிலம் அறியாத சாமானியனுக்கும் நீதிமன்றத்தின் நியாயம் தெரியப்படுத்தப்படும். எனவே, தீர்ப்பின் நகல்களை மாநில மொழியிலும் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார் குடியரசுத் தலைவர்.