அமெரிக்காவின் ரிசர்வ் வங்கி தலைவர் பதவிக்கு ரகுராம் ராஜன் சிறந்த வேட்பாளர்!

தமிழ்நாட்டை சேர்ந்த பொருளாதார வல்லுனர் ரகுராம் ராஜன் (வயது 53),
மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் (2013–ம் ஆண்டு) இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2016 செப்டம்பர் மாதம் முடிந்தது. முன்னதாக இருந்த ரிசர்வ் வங்கி கவர்னர்கள் போல அல்லாமல், வெளிப்படையாக கருத்துகளை கூறியவர், ரகுராம் ராஜன். அவருக்கு எதிராக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கடுமையாக விமர்சித்தார்.

ரகுராம் ராஜன் பதவி காலம் முடிவதற்கு முன்னதாக அவர் 2–வது முறையாக கவர்னராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவரைப்பற்றி பா.ஜனதா எம்.பி., சுப்பிரமணிய சாமி எழுப்பிய தனிப்பட்ட விமர்சனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து தான் 2–வது முறையாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவி ஏற்கப்போவதில்லை என்றும், பதவிக்காலம் முடிந்ததும் தான் மீண்டும் அமெரிக்கா சென்று கல்விப்பணியில் சேரப்போவதாகவும் கடந்த ஜூன் மாதம் ரகுராம் ராஜன் திடீரென அறிவித்தார். இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டார்.

கடந்த வருடம் ரகுராம் ராஜன் பதவி விலகிய 2 மாதங்கள் கழித்து, பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அந்த முடிவில், ரகுராம் ராஜன் பங்களிப்பு இருக்கலாம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் அது மறுக்கப்பட்டது. சிகாகோ பல்கலைக்கழகத்தில் நிதித்துறை பேராசிரியராக பணியாற்றி வரும் ரகுராம் ராஜன் ‘ஐ டூ வாட் ஐ டூ’ என்ற புத்தகம் எழுதினார். அதில் ரூபாய் நோட்டு தடையை நான் ஒருபோதும் ஆதரித்தது இல்லை, பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்தேன் என குறிப்பிட்டு உள்ளார். அவருடைய இந்த விமர்சனம் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதேபோன்று இவ்வருட பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் அவருடைய பெயரும் இடம்பெற்று உள்ளது, அவருக்கு கிடைக்கலாம் எனவும் கூறப்பட்டது.

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைமைப் பதவி வகிக்கும் முதல் பெண்மணி ஜேனட். அமெரிக்க பத்திரிக்கை வெளியிட்ட உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் அமெரிக்க மத்திய வங்கிகளுக்கான முதன்மை அதிகாரியாக பணியாற்றிவரும் ஜேனட் யெல்லென். அவருடைய பதவி காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தற்போது அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பதவிக்கான பரிந்துரையில் இடம்பெற்று உள்ளார்.

உலக பைனான்சியல் பத்திரிக்கை Barron தன்னுடைய கட்டுரையில் அமெரிக்காவின் ரிசர்வ் வங்கியின் தலைவர் பதவிக்கு ரகுராம் ராஜன் சிறந்த வேட்பாளர் என குறிப்பிட்டு உள்ளது. “உலகம் முழுவதும் சிறந்த திறன் கொண்டவர்களை விளையாட்டு அணிகள் பணிக்கு அமர்த்தும் போது, அரசு தலைமை வங்கிகளும் பணியமர்த்தக்கூடாது? அமெரிக்காவின் ரிசர்வ் வங்கியின் தலைவர் பதவிக்கு ரகுராம் ராஜன் சிறந்த வேட்பாளர் என தெரிவித்து உள்ளது. அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் ரிசர்வ் வங்கியின் தலைவராக ஜெரோம் பவலை நியமனம் செய்யலாம் என கூறப்படும் நிலையில், ரகுராம் ராஜன் பெயரும் பட்டியலில் இடம்பெறுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...