செருப்பு காணாமல் போச்சு...! எப்.ஐ.ஆர். போடுங்க..! - இளைஞர் புகாரால் விசாரணையை தொடங்கிய போலீசார்..!!

வீட்டின் வெளியே இருந்த என் புதுச் செருப்பை காணோம் என்று  இளைஞர் அளித்த
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மிகப்பெரிய கொள்ளை, கொலை, அடிதடி போன்றவற்றில் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்ய போலீசார் தாமதித்து வரும் நிலையில், செருப்பு காணாமல் போனதற்கு ஆர்வமாக எப்.ஐ.ஆர். பதிவு செய்தது வியப்பை அளித்துள்ளது. இந்த சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் நடந்துள்ளது.

புதுச் செருப்பு

புனே மாவட்டம், கேட் நகரம் ராக்‌ஷேவாடி பகுதியைச் சேர்ந்தவர் விஷால் கலேகர். இவர் பலேஷ்ரெசிடென்சி எனும் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் குடியிருந்து வருகிறார்.  கடந்த 3-ந்தேதி தனது வீட்டு வாசலில் தனது புதுச் செருப்பை கழற்றிவைத்து, வீட்டில் இருந்தார்.

ஆனால், அதை யாரோ திருடிச் சென்றுவிட்டனர்.

எப்.ஐ.ஆர்.

இதையடுத்து, கேட் போலீஸ் நிலையம் சென்ற கலேகர், தான் 425 ரூபாய்க்கு வாங்கி. தனது புதுச் செருப்பு வீட்டில் முன் கழற்றி வைத்து இருந்தேன் அது காணாமல் போய்விட்டதாகக் கூறி புகார் செய்தார். மேலும், முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யக்கூறினார்.

வேறு வழியின்றி  போலிசாரும் ஐ.பி.சி. 379(அடையாளம் தெரியாத நபர்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவுசெய்து இப்போது செருப்பையும், அதை திருடியவரையும் தேடி வருகின்றனர்.

விசாரணை தீவிரம்

இது குறித்து கேட்போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் பிரதீப் ஜாதவ் கூறுகையில், “ கேல்கர்அளித்த புகாரின் அடிப்படையில், செருப்பு காணமல் போனதற்காக திருட்டு வழக்கு அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளோம். விசாரணை நடத்தி வருகிறோம். இதற்கு முன் இது போல் யாரும் வந்து புகார் கொடுத்து நாங்கள் பார்த்தது இல்லை.

அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம், யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பாக துணை ஆய்வாளர் எஸ்.எம். தோலே விசாரணை நடத்தி வருகிறார். எப்.ஐ.ஆர். நகலும் கேல்கருக்கு கொடுக்கப்பட்டது’’ எனத் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...