பிகாரில் ஒரு பல்கலைக் கழகத்தின் வலைதளத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட
தேர்வறை நுழைவுச் சீட்டில் மாணவரின் புகைப்படத்திற்கு பதிலாக விநாயகரின் படம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னாவில் இருந்து 145 கிமீ தொலைவில் இருக்கும் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகத்தின் கீழ் ஜே.என். என்ற கல்லூரி இயங்கிவருகிறது. இந்தக் கல்லூரியில் கிருஷ்ண குமார் ராய் என்ற மாணவன் பி.காம். முதலாம் ஆண்டு படித்துவருகிறார்.
இவர் கடந்த அக் 4ஆம் தேதி நடைபெற்ற முதல் பருவத் தேர்வுக்கான நுழைவு சீட்டைப் பல்கலை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துள்ளார். நுழைவு சீட்டை சரி பார்க்கும் போது அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக விநாயகர் படம் பதியப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்துக் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்த பிறகு நுழைவுச் சீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிறகு அவர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“என் நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அதில் என் புகைப்படமும், முகவரியும் தவறாக இருந்தது. இதனை மாற்றித் தர வேண்டி ஒரு மாத காலமாகக் கல்லூரி அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் அலைந்தேன். அதன் பிறகே மாற்றம் செய்யப்பட்டது. இல்லையெனில், எனக்குப் பதிலாக விநாயகர் வந்து தேர்வு எழுதியிருப்பார்' என்று நினைக்கிறேன்” என்று அந்த மாணவன் கூறியுள்ளார்.
“இதில் பல்கலையின் தவறு எதுவும் இல்லை. மாணவர் ஆன்லைனில் பதிவு செய்யும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டிருக்கலாம்” என்று பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்ட 25 கல்லூரிகள் உட்பட 68 கல்லூரிகள் அதன் கீழ் செயல்பட்டுவருகின்றன. இப்பல்கலைக்கழகத்தில் இது போன்ற தவறு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.