பழைய நோட்டுக்கு பதில் புதுசு சரத்குமாருக்கு ஐகோர்ட் யோசனை!!

தேர்தலின் போது, கைப்பற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை, புதிய நோட்டுகளாக
மாற்றி தர, உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி, நடிகர் சரத்குமாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

9 லட்சம் ரூபாய்தமிழக சட்டசபை தேர்தலின் போது, திருச்செந்துார் தொகுதியில், ச.ம.க., தலைவர், நடிகர் சரத்குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில், அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.

தேர்தல் செலவுக்காக, சரத்குமார், ஒன்பது லட்சம் ரூபாயை, காரில் வைத்திருந்த போது, தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர். அதை, திருச்செந்துார் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.தேர்தல் முடிந்ததும், கைப்பற்றிய பணத்துக்கான கணக்கை, தேர்தல் கமிஷனிடம், சரத்குமார் தாக்கல் செய்தார். இதை ஆய்வு செய்த தேர்தல் கமிஷன், கைப்பற்றிய பணத்தை பெற்று கொள்ளும்படி, சரத்குமாருக்கு உத்தரவிட்டது.

அதன்படி, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், சரத்குமாருக்கு அளிக்கப்பட்ட போது, அதை வாங்க மறுத்தார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சரத்குமார்தாக்கல் செய்த மனுவில், 'ஏற்கனவே கைப்பற்றிய பழைய பணம், தற்போது செல்லாததாகி விட்டது. அதே பழைய நோட்டுகளை, என்னிடம் திருப்பி கொடுத்தனர்.

'அதை மாற்றி கொடுக்கும்படி கேட்டதற்கு, மறுத்து விட்டனர். பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது சட்ட விரோதம். கோரிக்கை'எனவே, பழைய ரூபாய் நோட்டுக்கு பதில், காசோலை அல்லது வரைவோலை வழங்கும்படி, தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறியுள்ளார்.மனு, நீதிபதி துரைசாமி முன், விசாரணைக்கு வந்தது. பழைய ரூபாய் நோட்டுகள் தொடர்பான வழக்குகளை, உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என்பதால், உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...