அண்மையில் தொடர் போராட்டங்கள் நடத்திய அரசு ஊழியர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின்
கண்டிப்பான வலியுறுத்தலை அடுத்துத் தங்களது போராட்டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு பணிக்குத் திரும்பினர். ஆனாலும் அரசு தங்களது கோரிக்கைகளை முழுமையாக ஏற்கும் வரை எங்கள் போராட்ட முன்னெடுப்புகள் ஓயாது என்று அரசு ஊழியர்கள் சங்கங்களின் போராட்டக் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 13 லட்சம் பேர் இருக்கிறார்கள். 2006 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைச் சரிசெய்ய வேண்டும் என்பது இவர்களின் முக்கியமான கோரிக்கை. இந்த முரண்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு சண்முகம், உமாநாத் இருவர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு. அந்தக் குழுவின் பரிந்துரைகள் இன்னமும் அமல்படுத்தப்படவில்லை.
இந்த மாதம் 23ஆம் தேதி வழக்கு விசாரணை இருப்பதால், தற்போது அறிவித்துள்ள “ஏமாற்று ஊதியக் குழுவைப் பற்றி அரசு ஊழியர்களுக்கு விளக்குவதற்காக” வரும் 20ஆம் தேதி மாநிலம் முழுவதும், மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோவினர் விளக்கக் கூட்டம் நடத்த இருப்பதாக நம்மிடம் அரசு ஊழியர் சங்கத்தின் பிரதிநிதி பாலு தெரிவித்திருந்தார். இதன்படி, தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்கள் கோரிகைகளை வலியுறுத்தி விளக்கக் கூட்டங்களை இன்று (அக்டோபர் 20) மாலை தமிழகம் முழுவதும், மாவட்டத் தலைநகரங்களில் நடத்தினர்.
இந்தக் கூட்டங்களில், அடுத்த கட்டப் போராட்டத்துக்கு எப்படித் தயாராவது என்றும், நீதிமன்றத்தில் தங்களது நியாயத்தை எடுத்துச் சொல்லும் வழிமுறைகள் பற்றியும் ஆலோசித்திருக்கிறார்கள்.
அரசு ஊழியர் போராட்டம் என்பது நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது என்பதையே இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.