நிலுவையில் உள்ள பிற மாநில இடைத்தேர்தல் நடக்கும் போது ஆர்கே நகர்
இடைத்தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ஏகே ஜோதி கூறியுள்ளார்.
ரத்து
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்கே நகர் தொகுதி காலியாக உள்ளது. அங்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் சசிகலா அக்கா மகன் தினகரன், மதுசூதனன், திமுகவில் மருதுகணேஷ், பா.ஜ., கங்கை அமரன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். ஆனால், பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
உத்தரவு
இந்நிலையில், வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை ஐகோர்ட் டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆர் கே நகருக்கு தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது ஆர்கே நகருக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்று அறிவிக்கப்படவில்லை.
பதில்
தொடர்ந்து இன்று (அக்.25) குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது, ஆர் கே நகருக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அப்போது ஆர் கே நகர் இடைத்தேர்தல் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே. ஜோதி பதிலளிக்கையில், நாட்டில் உள்ள பிற மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் போது, ஆர் கே நகருக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும். டிசம்பர் 31ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனக்கூறினார்.