நீட் பயிற்சி மையத்திற்கு அனிதா பெயர்!!!

நீட் பயிற்சி மையங்களுக்கு அனிதாவின் பெயரைச் சூட்ட வேண்டும்
என்று நடிகர் அரவிந்த் சாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்

நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வு பயிற்சிக்காக 20 கோடி ரூபாயை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, தனியார் நிறுவனங்களுடன் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு முதல் கட்டமாக 100 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.



இப்பயிற்சி வகுப்புகள் குறித்து அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "இறுதியாக நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிந்துகொண்டேன். நீட் பயிற்சி மையங்களுக்கு அனிதாவின் பெயரைச் சூட்ட வேண்டும் என விரும்புகிறேன். நீட் விவாதங்கள் ஒருபுறம் தொடரட்டும். அதேவேளையில் நீட் தேர்வு இப்போதைக்கு கட்டாயம் என்ற சூழல் இருப்பதால் இத்தகைய பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...