*ஏடிஎம் கார்ட் லாக் ஆனதால் காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்ட ரஷ்ய சுற்றுலா பயணி,*
*காஞ்சிபுரம், குமரக்கோட்டம் கோயில் வாசலில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவர் யாசகம் கேட்டுக் கொண்டிருந்த காட்சி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.*
*ஏ.இவாஞ்சலின் (24) என்ற இந்த நபர் அசலான பாஸ்போர்ட், விசா என்று சட்டபூர்வமான ஆவணங்களை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. செப் 24-ம் தேதி இந்தியா வந்துள்ளார் இவர்.*
*செவ்வாய் காலை சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வந்துள்ளார். கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் சில கோயில்களைப் பார்த்து விட்டு மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரக்கோட்டம் கோயிலுக்கு அருகில் உள்ள ஏடிஎம். இல் பணம் எடுக்கச் சென்றார்.*
*அவரது PIN நம்பர் லாக் ஆகிவிட பணம் எடுக்க முடியாமல் தவித்தார். இதனால் செய்வதறியாது வெறுப்படைந்த அவர் கோயில் வாசலில் யாசகம் கேட்டு அமர்ந்திருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.*
*இந்தத் தகவலைப் பெற்ற போலீஸார் உடனடியாக வந்து இவாஞ்சலினை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரது பயண ஆவணங்களைச் சரிபார்த்தனர். அதன் பிறகு அவருக்குப் பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.*