டெங்கு காய்ச்சலுக்காக மருத்துவமனைகளில் ஐசியு,
ஐஎம்சியு பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு காப்பீட்டுத் திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என்றார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டையில் அக்டோபர் 14 -ஆம் தேதி நடைபெறவுள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நடைபெறும் மாவட்ட விளையாட்டரங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளை ஆட்சியர் சு. கணேஷ், வீட்டு வசதி வாரியத்தலைவர் பி.கே. வைரமுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அமைச்சர் ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில் கடந்த 48 மணி நேரத்தில் கொசுக்களை உருவாக்கும் சூழ்நிலையில் செயல்படும் வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது குற்றநடவடிக்கை மேற்கொள்ளவும் அரசு தயங்காது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள், வணிக நிறுவனங்கள் உள்பட 600 -க்கும் மேற்பட்ட சங்கங்களும், உணவுப் பாதுகாப்புத் துறையும் இணைந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள உணவகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு நிலவேம்புக் கசாயம் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மருந்து வணிகர்களும் இப்பணியில் இணைந்து செயல்படவுள்ளனர். சேலம் மாவட்டத்துக்கு 16 பேர் கொண்ட சிறப்பு மருத்துவர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு ஷாக் சிண்ட்ரோம், டெங்கு ஹெமரேஜ் காய்ச்சல் ஆகிய பாதிப்புகளுக்கு உள்ளான நோயாளிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 6.28 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெங்கு பாதித்து ஐசியு, ஐஎம்சியு - பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் வரை வழங்கப்படும். டெங்கு பாதித்தவர்களை 10 முதல் 15 நாள்கள் வரை வைத்திருந்து அதன் பிறகு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கும் தனியார் மருத்துவமனைகள் குறித்த புகார்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
டெங்கு காய்ச்சல் பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டிக் கொண்டேயிருந்தாலும், அரசு தனது பணிகளைத் தொய்வின்றி தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.