போட்டி தேர்வுக்கான கற்பித்தல் முறை!!

மதுரை: மதுரையில் முதுகலை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு புதுார் எல்.பி.என்.,
பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையில் நடந்தது. டி.கல்லுப்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மைய முதல்வர் செல்வி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ராமச்சந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.மாரிமுத்து பேசுகையில், ‘மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர்களுக்கு பாடங்கள் வாரியாக அக்.,13 வரை இப்பயிற்சி வகுப்பு நடக்கிறது. மாணவர் மனப்பாடம் செய்யாமல் பாடங்களை புரிந்து கொள்ளும் வகையிலான கற்பித்தல் முறையை ஆசிரியர் கடைபிடிக்க வேண்டும். பொது தேர்வு மட்டுமின்றி அனைத்து வகை போட்டித் தேர்வுகளையும் சந்திக்கும் வகையில் அவர்களை தயார்படுத்த வேண்டும்,‘ என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...