பருவ காலத்துக்கேற்ப கடிகார நேரத்தை மாற்றியமைத்துக்
கொள்வது பிரிட்டனில் வழக்கமான ஒன்று. அந்த வகையில் ஒரு மணி நேரம் பின்னோக்கி இன்று மாற்றப்படுகிறது.
வழக்கமாக பிரிட்டனில் ஆண்டுக்கு இரண்டு முறை கடிகார நேரத்தில் மாற்றம் செய்யப்படும். பிரிட்டனின் நேர மாற்ற நடைமுறை அறிமுகமாகி 101 வருடங்கள் பூர்த்தியாகிறது. வசந்த காலத்தில் ஒரு மணி நேரம் முன்நோக்கியும், இலையுதிர் காலத்தில் ஒரு மணி நேரம் பின்னோக்கியும் கடிகாரத்தில் நேர மாற்றம் செய்யப்படும். வசந்தகாலம் தொடங்கும் மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று அதிகாலை ஒரு மணி இரண்டு மணியாக மாற்றப்படும். இலையுதிர் காலமான அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை, மீண்டும் ஒரு மணி நேரம் பின்னோக்கி மாற்றப்படும்.
கடந்த 1916ஆம் ஆண்டு கோடைக்காலச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, கடிகாரத்தில் நேரத்தை மாற்றம் செய்வதில் மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால் கடிகாரத்தில் எவ்வாறு நேரத்தை மாற்றுவது என்பதை தொடர்ந்து அரசு சுவரொட்டிகள் மூலம் விளக்கமளித்து வந்தது. அதன்பின்னர் கடந்த 1941ஆம் ஆண்டு பிரிட்டன் நேரத்தில் மற்றுமொரு மாற்றம் செய்யப்பட்டது. அதாவது கிரீன்விச் இடைநிலை நேரம் (GMT) நேரத்திலிருந்து கடிகாரம் இரண்டு மணி நேரம் முன்நோக்கி மாற்றப்பட்டது. பின்னர் 1947ஆம் ஆண்டு இரண்டு மணி நேரம் பின்னோக்கி மாற்றப்பட்டது.
இதேபோன்றதொரு முயற்சி 1968ஆம் ஆண்டு செய்யப்பட்டு கடிகாரம் ஒரு மணி நேரம் முன்நோக்கி மாற்றப்பட்டு, 1971ஆம் ஆண்டு வரை அதில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. அதன் பின்னர் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நேரத்தை மாற்றும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன்படி இந்த மாதம் கடைசி ஞாயிறான இன்று (29.10.2017) நேர மாற்றம் செய்யப்பட உள்ளது.