விஸ்வரூபம் எடுக்கிறது தேச துரோக வழக்கு எந்த நேரத்திலும் தினகரன் கைதாக வாய்ப்பு !!

தேச துரோக வழக்கில் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்களுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். முன்ஜாமீன் கேட்பதற்கு பதில் சட்டப்படி வழக்கை எதிர்கொள்ள தீர்மானித்து இருக்கிறார்.

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகித்ததாக டி.டி.வி.தினகரன், புகழேந்தி உள்பட ஆதரவாளர்கள் 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர்களில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் நேற்று  கைது செய்யப்பட்டனர்.

கடந்த 29-ந் தேதி முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் இருந்தபோது துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது. அதில் குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருவதாக கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அடிப்படையில் தற்போது 17 பேர்,  மேலும் அடையாளம் தெரியாத 19 பேர் என மொத்தம் 36 பேர் மீது அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்கள் மீது இ.பி.கோ. சட்டப்பிரிவுகளான 143 (அதிக நபர் கூடுதல்), 120 பி (கூட்டுசதி), 124ஏ (மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக செயல்படுதல்), 153 (வன்முறை தூண்டுதல், கலகம்), 500 (அவதூறு பரப்புதல்), 504 (பொது அமைதிக்கு பங்கம்), 506(2) (மிரட்டல்) ஆகிய 7 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த அடிப்படையில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்படலாம்

நேற்று காலை முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம், தாதகாப்பட்டியை சேர்ந்த சூர்யா, கரியபெருமாள் கரடு கந்தப்பகாலனியை சேர்ந்த சந்திரன், மாணவர் அணி மாநகர செயலாளர் டாக்டர் சசிகுமார் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனை அடுத்து அன்னதானப்பட்டி போலீசார் தினகரனை கைது செய்வதற்கு முயற்சி செய்து வருகிறார்கள்.

இதையடுத்து டி.டி.வி.தினகரன் நேற்று நள்ளிரவு வரை முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெறுவதை காட்டிலும் அவர் சிறைக்கு செல்வதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...