சசிகலா போன்: தவிர்த்த எடப்பாடி????

பரோலின் மூன்றாவது நாளான இன்று (அக்டோபர் 8) இரண்டாவது முறையாக தன் கணவர் நடராஜனை சந்திக்க
பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனைக்குச் சென்றார் சசிகலா.

நேற்று அவர் மருத்துவமனைக்கு சென்றபோது பெருமளவில் தொண்டர்கள் கூடி வரவேற்றனர். ஆனால் இன்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கூட்டம் கூட முடியாத அளவுக்கு மருத்துவமனை வளாகத்தில் போலீஸார் அதிகப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு மருத்துவமனை சென்ற சசிகலா… சிகிச்சையில் இருக்கும் தன் கணவர் நடராஜனுடன் சில மணி நேரங்கள் இருந்துவிட்டு மதியம் 2 மணிக்கு தான் தங்கியிருக்கு தி,நகர் கிருஷ்ணப்ரியா இல்லத்துக்குத் திரும்பினார்.

இன்று காலை மருத்துவமனை செல்லும்போதும் மருத்துவமனை வாசலிலும் சசிகலாவுக்கு அதிக கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கும்போதுதான் சில முக்கியத் தகவல்கள் கிடைத்தன.

‘’சசிகலாவை யார் யார் சந்திக்கிறார்கள் என்று உளவுத்துறையை கேட்டபடியே இருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி. இந்நிலையில் இன்று சேலத்தில் இருந்த முதல்வர் எடப்பாடியின் உதவியாளர் கோபியின் செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்திருக்கிறது. அவர் எடுத்து ஹலோ என்றபோது, எதிர்முனையில் பேசியது இளவரசியின் மகன் விவேக்.

தி.நகர் இல்லத்தில் சசிகலாவுடன் இருந்த விவேக், தனது போன் மூலம் முதல்வர் எடப்பாடியின் உதவியாளர் கோபியை அழைத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியிடம் சசிகலா பேச வேண்டும் என்றும், போனை முதல்வரிடம் கொடுக்குமாறும் கோபியிடம் விவேக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து கோபி இந்தத் தகவலை எடப்பாடி பழனிசாமியிடம் தெரியப்படுத்த அவர் போனை வாங்கவே இல்லையாம். இரண்டு மூன்று முறை விவேக் முயற்சித்தும் எடப்பாடி பழனிசாமி சசிகலாவுடன் பேசுவதைத் தவிர்த்துவிட்டார்.

எடப்பாடி பழனிசாமியுடன் பேசி, ‘என்ன பிரச்னை… எங்களை ஒதுக்கச் சொல்லி டெல்லி நிர்பந்தம் கொடுக்கிறதா?’ என்றெல்லாம் கேட்கத்தான் விவேக் மூலம் போன் போட்டிருக்கிறார் சசிகலா. ஆனால் அதற்கான வாய்ப்பே கொடுக்காமல் தவிர்த்துவிட்டார் எடப்பாடி. அதன் பிறகுதான் இன்று திடீரென மருத்துவமனை வளாகத்தில் நேற்று இல்லாத அளவுக்கு பாதுகாப்பு கெடுபிடிகள் பலப்படுத்தப்பட்டன’’ என்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள் வட்டாரத்தில்.

நாம் காவல்துறையில் சில அதிகாரிகளிடம் பேசியபோது,

‘’மாநில உளவுத்துறை மூலம் சசிகலாவை யார் யார் சந்திக்கிறார்கள் என்று எடப்பாடி கண்காணிப்பது போல, ஒருவேளை எடப்பாடி சசிகலாவுடன் போனில் பேசுகிறாரா என்று மத்திய உளவுத்துறையும் தீவிரமாக கண்காணிக்கிறது. அதனால் கூட விவேக் போன் மூலம் சசிகலாவிடம் பேசுவதை முதல்வர் தவிர்த்திருக்கலாம்’’ என்கிறார்கள்.

பரோல் நாட்களில் அமைச்சர்கள் சிலர் சசிகலாவின் தொடர்பு எல்லைக்குள் செல்லமுயலும் நிலையில்… இப்போதைக்கு சசிகலாவின் தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே தன்னை வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...