தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் சபாநாயகரால்
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர்கள் அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி துரைசாமி மாற்றப்பட்டு, இனி நீதிபதி ரவிச்சந்திரபாபு வழக்கை விசாரிப்பார் என்று தகவல் வெளிவந்திருக்கிறது.
தகுதி நீக்கம் செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி, ‘சபாநாயகரால் காலி என்று அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்குத் தேர்தல் அறிவிப்பு எதையும் வெளியிடக் கூடாது’ என்று தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்து வழக்கை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதுபற்றி மின்னம்பலத்தில் செப்டம்பர் 20ஆம் தேதி நாம் வெளியிட்ட விரிவான செய்தியில், “வரும் அக்டோபர் 3ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுதல் ஆகும் வாய்ப்புள்ளது. அப்போது இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியும் மாறலாம். இனி அக்டோபர் 4ஆம் தேதி விசாரணை தொடங்கி, அது எத்தனை நாள்கள் நடக்கும், இறுதித் தீர்ப்பு எப்போது வரும், அதன்பின் உச்ச நீதிமன்ற அப்பீல் என்று எடப்பாடி அரசுக்கு கால அவகாசம் நிறைய இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தோம்.
நாம் ஏற்கெனவே சொன்னது போலவே இந்த வழக்கின் நீதிபதி துரைசாமி மாற்றப்பட்டு, புதிய நீதிபதியான ரவிச்சந்திரபாபு விசாரிப்பார் என்று உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தைச் சேர்ந்தவரான நீதிபதி ரவிச்சந்திரபாபு 1984ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தவர். மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தியிடம் பிராக்டிஸ் செய்த ரவிச்சந்திரபாபு, 2000ஆம் ஆண்டு மத்திய அரசின் கூடுதல் ஸ்டேண்டிங் கவுன்சில் ஆக நியமிக்கப்பட்டார். அதன்பின் 2005ஆம் ஆண்டு மத்திய அரசுக்கான ஆலோசனைக் குழுவில் மூத்த உறுப்பினர் ஆனார். தொடர்ந்து மத்திய அரசின் சுங்கம், சேவை வரி, கலால் துறைகளின் மூத்த வழக்கறிஞர் ஆக இருந்தார். 2011ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் ரவிச்சந்திரபாபு.
தகுதி நீக்க வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கவுன்ட்டர் பெட்டிஷன் எனப்படும் எழுத்துபூர்வமான வாதங்களாக வைக்க நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்த நிலையில்... இந்தியாவே எதிர்பார்த்திருக்கும் முக்கியமான இந்த வழக்கில் நீதிபதி மாற்றத்தை அடுத்து வழக்கும் போகும் போக்கை பல்வேறு தரப்பினரும் அறிந்துகொள்ள ஆவலாகக் காத்திருக்கின்றனர்.