‛நிர்பயா நிதி திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசுகள் ஒத்துழைப்பதில்லை' என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.
டில்லியில், 2012ல், மருத்துவ மாணவி ஒருவர், பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தார். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து,
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த, 'நிர்பயா நிதி' என்ற பெயரில், மத்திய அரசு, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.'நிர்பயா நிதி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை' என, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இதுகுறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நிர்பயா நிதி செலவிடப்படும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, வழக்கறிஞர், இந்திரா ஜெய்சிங்கை, நீதிமன்றம் நியமித்தது. இந்த வழக்கு, நீதிபதிகள், மதன் பி.லோகூர், அப்துல் நஸீர், தீபக் கப்தா அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர், இந்திரா ஜெய்சிங் கூறியதாவது:
பெண்களுக்கு, நிர்பயா நிதி வழங்கும் திட்டங்களை செயல்படுத்துவதில், மாநில அரசுகளின் ஒத்துழைப்பு, மத்திய அரசுக்கு கிடைக்கவில்லை. இதுதொடர்பாக, நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. நிர்பயா நிதியை, 36 திட்டங்கள் மூலமாக, பெண்களுக்கு வழங்குவதை முறைப்படுத்துவது குறித்து, வழிகாட்டுதல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.