வழக்கு விவரங்களை செல்பேசி மூலம் தெரிந்து
கொள்ளும் வகையில் புதிய ஆப் ஒன்றை உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர் நேற்று (அக்டோபர் 28) அறிமுகப்படுத்தினார்.
காகித ஆவணங்கள் பயன்பாட்டின் சுமையைக் குறைக்கும் வகையில் நாடு முழுவதும் வழக்கு ஆவணங்களை ‘டிஜிட்டல்’ மயமாக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. அதன்படி உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில், டிஜிட்டல் மையங்கள் தொடங்கப்பட உள்ளன. அதனையொட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர் டிஜிட்டல் மையத்தைத் திறந்து வைத்தார். அதேபோல் சமரச தீர்வு மூலம் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்த மாவட்ட நீதிபதிகளுக்கான பயிற்சியையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், ராஜீவ்சக்தேர், புஷ்பா சத்யநாராயணா, கிருஷ்ணகுமார், கிருபாகரன், வைத்தியநாதன், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீதிபதி மதன் பி.லோகுர், “இந்த ஆப் மூலம் ஆவணங்களை ஸ்கேன் செய்து சேமித்து வைக்கலாம். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை செல்பேசி மூலம் தெரிந்து கொள்வதற்காக புதிய ஆப் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த ஆப் தொடங்கப்பட்ட ஒரு வாரத்தில் 2 லட்சம் பேர் அதைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். அடுத்த வாரம் முதல் இந்த ஆப் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும். அதேபோல் மின்னஞ்சல் மூலம் வழக்குகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதி தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 3 லட்சம் பேர் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். தேசிய நீதித்துறை தகவல் தொகுப்பில் ஏற்கனவே 4 உயர்நீதிமன்றங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் வழக்கு விவரங்களை உடனுக்குடன் பெற முடியும். அடுத்த 10 நாட்களில் மேலும் 10 உயர்நீதிமன்றங்கள் இதில் இணைக்கப்படும். இதனால் 2 மாதங்களில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும். நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீர்வு மூலம் விரைந்து முடிக்க முடியும். 60 நாட்களுக்குள் சமரச தீர்வை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால், புதுடெல்லியில் 30 நாட்களில் பல வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. சமரச தீர்வு மூலம் பேசி தீர்க்கப்பட வேண்டிய வழக்குகளை முடிக்க சமரச தீர்வு மையத்தை அணுகுமாறு வழக்கறிஞர்களுக்கு, மாவட்ட நீதிபதிகள் அறிவுறுத்த வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.