பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை!!!

ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில்
அளிக்கப்படும் இலவச 'வைபை' பயன்படுத்தினால், சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக மத்திய அரசின் இந்திய கணிப்பொறி அவசர கால மீட்பு குழு எச்சரித்துள்ளது.

இது குறித்து, அந்த அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை: பொது இடங்களில் பயன்படுத்தப்படும் ‛வைபை' களில் சைபர் தாக்குதலுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மொபைல் போனில் வைக்கப்பட்டிருக்கும் கிரடிட், டெபிட் கார்டு விவரங்கள், கடவுச்சொல், குறுஞ்செய்திகள், இமெயில் போன்ற தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. இதனால், பொது மக்கள் எந்த சூழ்நிலையிலும் பொது இடங்களில் ‛வைபை' பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்கு பதில், வயர் இணைப்புகள் , விபிஎன் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...