புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசிடமிருந்து புதுச்சேரி அரசு வாங்கிய ரூ.6 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடிசெய்ய வேண்டும், 7}வது ஊதியக்குழு பரிந்துரைகளை உள்ளாட்சி, தன்னாட்சி, பொதுத்துறை, அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர், ஊழியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்னா போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி, தன்னாட்சி, அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 7}வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வலியுறுத்தியும்.
மத்திய அரசிடமிருந்து புதுச்சேரி அரசு வாங்கிய ரூ.6 ஆயிரம் கோடி கடனை மத்திய அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும், அரசு ஊழியர் சம்மேளனம் முன்வைத்துள்ள 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்னா போராட்டம் நடைபெற்றது.
சம்மேளன தலைவர் மு.சீத்தாராமன் தலைமை தாங்கினார். கெüரவத் தலைவர் சிஎச்.பாலமோகனன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் கே.ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன், வெ.செல்வன், மோகன கிருஷ்ணன், பிரேமதாசன், கண்டன உரையாற்றினர். பொருளாளர் கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.
இதில் பல்வேறு அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் 50}க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.