உள்ளாட்சி தேர்தலை, மேலும் தள்ளிப்போடும்
நடவடிக்கைகளில், மாநில தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது.
கடந்தாண்டு, இதே மாதம் உள்ளாட்சி தேர்தலை, இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு, மாநில தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்தது. மனு தாக்கல் முடிந்த நிலையில், தி.மு.க., தொடர்ந்த வழக்கில், தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆரம்பத்தில், தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான முயற்சிகளில், மாநில தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டியது. ஆனால், 2016 டிசம்பரில், ஜெயலலிதா மறைந்த பின், அரசியல் நிலவரம் மாறியது. இதனால், ஆளும் கட்சியில் குழப்பமான சூழ்நிலை தொடர்கிறது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை, தலைமை தேர்தல் கமிஷன் இன்னும் தீர்மானிக்கவில்லை.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை மீண்டும் நடத்துவதற்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல், மாநில தேர்தல் கமிஷன் கிடப்பில் போட்டுள்ளதாக, தி.மு.க., வழக்கு தாக்கல் செய்துள்ளது. இருப்பினும், அதற்கு அசராமல், தேர்தலை தள்ளிப்போடும் மறைமுக நடவடிக்கைகளை, மாநில தேர்தல் கமிஷன் துவங்கிஉள்ளது. இதற்காக, வார்டுகள் மறுசீரமைப்பு பணிகள், கையில் எடுக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில், மாநில தேர்தல் கமிஷனர், மாலிக் பெரோஸ்கான் தலைமையில், வார்டு மறுசீரமைப்பு கமிஷனின் கூட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலை நகரில் நடந்தது. அதில், அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் பங்கேற்றனர். வார்டு மறுசீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், கலெக்டர்கள் பலரும், 'டெங்கு' ஒழிப்பு, பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளில், கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், வார்டு மறுவரையறை பணிகள் தள்ளிப்போகும் வாய்ப்புள்ளது. இதை காரணம் காட்டி, உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல், காலம் கடத்துவதற்கு, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.