ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைவது உறுதி

சென்னை: புகழ்பெற்ற, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

அமைவது உறுதி செய்யப்பட்டது.
இருக்கைக்கு தேவையான ரூ.33 கோடியில் தமிழக அரசு ரூ.10 கோடி செலுத்த முடிவு செய்துள்ளது. ‛ழ' என்ற அமைப்பு, ரூ.19 கோடி வரை பணம் திரட்டியுள்ளது. எஞ்சிய தொகையை தமிழ் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் திரட்டவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர்களின் நலனுக்காகவும் ஜெயலலிதாவின் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில், அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் ஜானகிராமன், திருஞானசம்பந்தம் ஆகியோர் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை ஒன்றை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு, உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் சமுதாயத்தின் வேண்டுகோளை ஏற்று ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த இருக்கையை ஏற்படுத்துவதன் மூலம் அமெரிக்காவில் தமிழ் மொழியை அடிப்படையாக கொண்டு இந்தியவியல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளுதல், ஆராய்ச்சி கல்வியில் தமிழ் இலக்கியம், இலக்கணம், பண்பாடு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்குதல், அமெரிக்க நூலகங்களிலும், ஆவண காப்பகங்களிலும் உள்ள தமிழ் தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்துதல், பதிப்பிக்கப்படாத ஆவணங்களை படியெடுத்து பதிப்பிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகள் மூலம் தமிழ் மொழியின் வளம் உலகறிய செய்ய வழிவகை ஏற்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...