BSNL.நிறுவணத்தில் ஜூனியர் டெலிகாம் ஆபீசர் பணி.-996 பேருக்கு வாய்ப்பு.*

*கல்வித்தகுதி:*
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் எம்.காம், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எஸ். படித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.

*வயது வரம்பு:*

விண்ணப்பதாரர்கள் 1.1.2017 தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு மிகாதவர்களாகவும் இருக்க வேண்டும்.

 எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

*தேர்வு செய்யும் முறை:*
ஆன்லைன் போட்டித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்காக ஆன்லைன் தேர்வு 5.11.2017-ம் தேதி நடக்க உள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.1000, கட்டணமாகச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.500 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றின் வழியே கட்டணம் செலுத்தலாம்.

*விண்ணப்பிக்கும் முறை:*

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்15.10.2017.
இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப்பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

*மேலும் விரிவான* *விவரங்களைத் தெரிந்துகொள்ள* www.externalexam.bsnl.co.in *என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.*
------------------------------------------------------------

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...