*_SSTA_*
✅✅✅
*ஊதியக்குழுவில் SSTAவின் வாதம் (2.6.2017)*

*🔵🔴ஊதியக் கருத்துக்கேட்பு அரங்கில் நுழைந்தவுடன் ஊதியக்குழு தரப்பில் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் (9300+4200) மற்றும் தேர்வுநிலை (1.6.2009ல் முன்பு/பின்பு) ஊதியம் (9300+4300) பற்றி ஏற்கனவே நிறைய விவாதம் செய்யப்பட்டு விட்டதால், அது தவிர்த்து ஏனைய விசயங்கள் விவாதிக்கலாம் எனக் கூறப்பட்டது.*


*_SSTA தரப்பில் சாதாரண (Ordinary) இடைநிலை ஆசிரியர் ஊதியம் பற்றியதே நமது வாதம் என்று கூறி, விவாதம் ஆரம்பமானது._*

*🔵🔴முதலாவதாக,  ஒரு ஊதியக்குழு எவ்வாறு ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது பற்றிப் பேசப்பட்டது. இதுவரை அமுல்படுத்தப்பட்ட அனைத்து ஊதியக் குழுக்களிலும் பின்பற்றப்படும் ஊதிய நிர்ணய முறைகள் பற்றியும் ஓர் பதவிக்கு புதிய ஊதியம் எவ்வாறு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.*

*_எந்த தேதியில் ஊதியக்குழு அமுலுக்கு வருகிறதோ அந்த தேதியில் ஓர் பதவிக்குரிய புதிய ஊதியம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியம் மற்றும் அன்றைய நாளில் அகவிலைப்படி ஆகியவற்றின் கூடுதலாக அமையும். 1.1.2006ல் இடைநிலை ஆசிரியரின் ஊதியம் 4500 (BP)+2250 (DP)+1620 DA (24%)= 8370. இதனையே புதிய ஊதியமாக நிர்ணயம் செய்திருக்க வேண்டும். எதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியருக்கு 5200 புதிய ஊதியமாக 6வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்பபட்டது? என்று SSTA தரப்பில் கேட்கப்பட்டது._*

*அரசு தரப்பில் 8000 புதிய ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.*

 _*8000 என்பது தவறு. அடிப்படை ஊதியம் 5200 மட்டுமே. தர ஊதியம் 2800 இதில் உள்ளடங்கியுள்ளது. தர ஊதியம் என்பது ஊதியக்குழுவின் கூடுதல் உயர்வு.*_

*ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 3170 ஊதியக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.*

*இதுவரை அமல்படுத்தப்பட்டுள்ள ஊதியக்குழுக்களில் 6வது ஊதியக்குழு தான் 54.13 % ஊதிய உயர்வு வழங்கியுள்ளது, ஆனால் அந்த ஊதியக்குழுவிலேயே இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய குறைப்பு ஏற்பட்டுள்ளது குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.*

*_இதனால் 2009க்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களில் ஏப்ரல் மாதத்தில் ஊதிய உயர்வு பெறும் இடைநிலை ஆசிரியருக்கும் ஜூலையில் ஊதிய உயர்வு (Increment) பெறும் இடைநிலை ஆசிரியருக்கும் ஊதிய வேறுபாடு தற்போது மொத்த ஊதியத்தில் ரூ.10,000 ஆக உள்ளது, என்று எடுத்துரைக்கப்பட்டது._*

*இப்பாதிப்பினால் இதுவரை 2009 ல் பணியில் சேர்ந்தவருக்கு 7,00,000 இலட்சம் இழப்பு ,2012ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு 5,00,000 இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.*

*🔵🔴மத்தியரசின் ஊதியவிகிதப் பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் எந்தவொரு மாநிலமும் இடைநிலை ஆசிரியருக்கு 5200ஐ அடிப்படை ஊதியமாக நிர்ணயம் செய்யவில்லை. அதற்கான அட்டவணையும் காட்டப்பட்டது.*

*7வது ஊதியக்குழுவின் உயர் அதிகாரிகள், கேரள மாநிலத்தில் 60% அகவிலைப்படி மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அவ்வாறே வழங்கலாமா? எனக் கேட்டனர். அதற்கு SSTA தரப்பில் அங்கு 5 ஆண்டிற்கு ஒருமுறை ஊதியவிகிதம் மாற்றி அமைக்கப்படுகிறது அப்படி நமக்கும் அமைக்கலாம் என்பதை தெரிவித்தோம்.*

*_🔵🔴வரும் ஊதியக்குழுவில் உங்கள் பாதிப்பு என்ன ? என்று கேட்டதற்கு, தற்போதைய ஊதியத்தை மேம்பாடு (Upgrade) செய்யாமல் அப்படியே நிர்ணயம் செய்தால், Pay Matrix ல் 2800 தர ஊதியம் பெறும் 2009 நியமன இடைநிலை ஆசிரியர் ஊதியம் 2400 தர ஊதியத்திலும், 2012 நியமன இடைநிலை ஆசிரியர் ஊதியம் 2000 தர ஊதியத்திலும், புதிய நியமன இடைநிலை ஆசிரியர் ஊதியம் 1900 தர ஊதியத்திலும் நிர்ணயம் செய்யப்படுவர் எனவும் பல இடங்களில் ( UPGRADE ) செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் விளக்கப்பட்டன._*

*மேலும் 10 ஆண்டிற்கு ஒரு முறை அமைக்கப்படும் ஊதியக்குழுவில் 2009க்குப் பிந்தைய நியமன இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய ஊயர்வு என்பதற்குப் பதிலாக ஊதியக் குறைப்பாக மாறிவிடும். ஏற்கனவே 6வது ஊதியக்குழு இடைநிலை ஆசிரியர்களிடையே இரண்டு விதமான ஊதியம் பெறும் நிலையை ஏற்படுத்திவிட்டது. 7 வது ஊதியக்குழுவில் இது இன்னும் பல பிரிவாக மாறும் எனக் கூறப்பட்டது.*

*_🔵🔴ஊதியக்குழு தரப்பில் 2800 தர ஊதியத்திற்கு நுழைவு ஊதியம் 29200 நிர்ணயம் செய்யப்பட வேண்டுமா? என வினாவினர். அதை SSTA தரப்பில் மறுத்து புதிய நியமனத்திற்கு மட்டுமே நுழைவு ஊதியம் 29200 எனவும், மற்றவர்களுக்கு நுழைவு ஊதியம் 29,200 உடன் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்துள்ளாரோ அந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வும் மற்றும் ஊக்க ஊதிய உயர்வும் (Increment & Incentive) கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என எடுத்துக் கூறப்பட்டது. மேலும் எவ்வாறு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதற்கான ஆவணமும் காட்டப்பட்டது._*

*5, 6 & 7வது ஊதியக்குழு பரிந்துரையில். "சம வேலை சம ஊதியம்" பற்றிய பரிந்துரைகள் கோடிட்டுக் காட்டப்பட்டது. இந்த பாதிப்புகள் களையாமல் புதிய ஊதியம் நிர்ணயம் செய்தால் "ஓரே கல்வித்தகுதி, ஒரே பணி"ஆனால் அடிப்படை ஊதியத்தில் மட்டுமே 10000 வேறுபாடாக அமையும் என்றும் இது மேலும் சில வருடங்களில் அதிகமாகி பல ஆயிரங்கள் வித்தியாசத்தை ஏற்படுத்திவிடும் என விளக்கிக் கூறப்பட்டது.*

 *_🔵🔴ஒரே பதவி; ஒரே கல்வித்தகுதிக்கு ஒரே ஊதியம் கோரி SSTA நடத்திய காலவரையற்ற 8 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக வழங்கிய கடிதத்தில் 7வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப் பரிந்துரைக்கப்படும் என்கிற உத்தரவாதம் பற்றிக் கூறப்பட்டது._*

*அனைத்து வாதமும் உரிய ஆவணங்களுடன் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது. மாநில இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைவதால் ஏற்படும் உத்தேச செலவின (தோராயமாக) விபரம் SSTAவால் சமர்ப்பிக்கப்பட்டது.*

*🔵🔴பத்தாண்டுகளுக்கு முன்பு கணக்கீடு செய்த பொழுது 540 கோடி செலவாகும் எனவும்,7 ஆண்டுகளுக்கு முன்பு கணக்கீடு செய்த பொழுது 640 கோடிக்கு மேல் செலவாகும் என கணக்கிட்டு இருந்தோம். ஆனால் தற்போது 195 கோடி என்ற மிக குறைவான செலவீனம் மட்டுமே கணக்கீடு செய்யப்பட்டுள்ளது, என ஊதியக்குழுவால் கேட்கப்பட்டது. நமது தரப்பில் இது மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டைச் சரிசெய்வதால் ஏற்படும் செலவீன பட்டியல். "செலவு குறைவாகத்தான் இருக்கும்" எனக் கூறப்பட்டது. நாம் அளித்த கணக்கீடு அட்டவணை உடனடியாக ஊதியக்குழுவால் சரிபார்க்கப்பட்டது.*

*_ஊதியக்குழு நமது ஊதிய முரண்பாட்டை நிச்சயம் பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளது. இதனை சரிசெய்யும் பட்சத்தில் ஆசிரியர்கள் போராட்ட தீவிரம் குறையும் என கூறப்பட்டது._*

*🔵பேச்சுவார்த்தையில் 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு களைய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.*

*_சக இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையப்பட்டால் மட்டுமே SSTAவின் ஊதிய மீட்புப் போராட்டம் முடிவுக்கு வரும். இல்லையேல் மிகமிக கடுமையான போராட்டங்களை கையில் எடுப்போம். எடுத்த கோரிக்கையை வென்றெடுக்காமல் ஓயாது SSTA._*

*இறுதியாக, ஊதியக்குழுவால் SSTA மாநிலப் பொறுப்பாளர்கள் விவரம் (பெயர், பதவி & முகவரி) பெறப்பட்டது.*
🙏🏻
*_வெற்றி என்பது எளிதல்ல!! அதை விட்டுவிடும் எண்ணம் SSTAவிற்கு இல்லை!!_*💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...