ஜே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்!!!

தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில்
சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற, உயர்கல்வி நிறுவனங்களில்,இன்ஜி., படிக்க, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பொது தேர்வுக்கு பின், உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., என்ற, பிரதான நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. பி.இ., - பி.டெக்., -பி.ஆர்க்., - பி.பிளான் ஆகிய படிப்புகளில் சேர, இரண்டு தாள்களுக்கு, ஏப்., 8ல் எழுத்து தேர்வு நடக்கிறது. கணினி வழி தேர்வு, ஏப்., 15, 16ல் நடக்க உள்ளது. இரண்டில், ஏதாவது ஒரு வகை தேர்வில் பங்கேற்க வேண்டும். இதற்கான ஆன்லைன் பதிவு, டிச., 1ல் துவங்கி, ஜன., 1ல் முடிகிறது. கூடுதல் விபரங்களை, https://jeemain.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...