🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*2009&TET மாவட்ட, வட்டார
ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் முக்கிய சாராம்சங்கள்*
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
*திருச்சி,நவம்பர்,12@2017*
1⃣ *இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப் படாவிட்டால் விரைவில் மிகப் பெரிய போராட்டம் சென்னையில் நடைபெறும்*
2⃣ *2009&TET ஊதிய போராட்டக் குழுவின் சார்பில் மாநில அளவிலான,மாவட்ட , ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருச்சி ஸ்ரீநிவாஸ் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது*
3⃣ *கூட்டத்தில் கலந்து கொண்டு மாநில செயலாளர் இராபர்ட் பேசியதாவது:இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படாவிட்டால் இடைநிலை ஆசிரியர்கள் 21000 பேரின் கல்விச் சான்றுகள் தலைமைச் செயலகத்தில் வைத்து கல்வித்துறை அமைச்சர்,கல்வித்துறை செயலாளர் ஆகியோரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்* *மேலும் எங்களது* *போராட்டமானது* *பள்ளி மாணவர்களின்* *படிப்பு பாதிக்கா வண்ணம் விடுமுறை நாட்களில் சென்னையில்* *வைத்து விரைவில் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என்றார்*
🆕 *கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:*
_கடந்த 8 ஆண்டுகளாக 2009க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் ஆறாவது ஊதியக் குழுவில் ஊதிய முரண்பாட்டினால் பாதிக்கப்பட்டனர்._
_அதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களையும் சட்டப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்_
3⃣ *கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை DPI வளாகத்தில் எட்டு நாட்கள் உண்ணாவிரதம் நடைபெற்றது*
*போராட்டத்தின் முடிவில் ஏழாவது ஊதியக்குழுவில் 2009 க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற உத்தரவாதத்தின் படி உண்ணாவிரதம் திரும்பப் பெறப்பட்டது*
*ஆனால் தற்போது அரசு அறிவித்துள்ள ஏழாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியமானது மத்திய அரசில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களின் ஊதியத்தை வழங்கி வருகிறது.*
🙊🙊🙊🙊
*ஒரே கல்வி தகுதி ஒரே பணி என்று அனைத்து தகுதிகளும் ஒரே மாதிரி இருக்கும் போது 1.6.2009 க்குப் பின் ,முன் என்று இரு வேறுபட்ட ஊதியத்தை வழங்கி வருகிறது*
*அவர்களுக்கும் எங்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் 11,000 வேறுபாடு உள்ளது*
🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛
*சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்*
🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓
*பிப்ரவரி 2016 ல் உண்ணாவிரதப் போராட்டத்தில் பெற்ற எழுத்துப்பூர்வ உத்திரவாதத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரத்திற்குள் பதில்(நடவடிக்கைகள்) அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவு*
👺👺👺👺👺
*இனியும் தமிழக அரசு தொடர்ந்து ஆசிரியர்களை ஏமாற்றம் செய்தால் மீண்டும் 2009 க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தகுதித்தேர்வு ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து கடுமையான போராட்ட களத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலையை அரசு உருவாக்குகிறது*
👍🏻✊🏻 *எனவே அரசு எழுத்துப் பூர்வமாக கொடுத்த உத்திரவாதத்தை விரைந்து போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது*
📄📄📄📄📄📄📄📄📄📄
*அரசாணை எண்: 303&date: 11/10/2017 பக்கம் 6 பத்தி 2 ல் உள்ள படி 2009க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய நிர்ணய படிவத்தை ( PAY Fixation option form) திரும்ப பெறுதல் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கு உரிய வழிமுறைகள், விண்ணப்பக்கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது*
😡😡😡😡😡😡
*நீதிமன்ற உத்தரவை அடுத்து விருப்பக் கடிதத்தை திரும்ப பெற வேண்டும்*
*10-01-2018 வரை நமக்கு நீதிமன்ற வழக்கில் விருப்ப மனு கொடுக்க கால அவகாசம் உள்ளது,அதுவரை அரசு தரப்பில் யாரையும் வற்புறுத்த மாட்டோம் என்று அரசு தரப்பில் தகவல் தெரிவிப்பு*
📩✉📩✉📩📩✉📩✉📩
*21, 000 பேரும் ஒன்றாக விருப்பக் கடிதத்தை திரும்ப பெற்று அல்லது விருப்பக் கடிதத்தை அளிக்காமல் நமது ஒற்றுமையையும், எதிர்ப்பையும் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்*
🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
*கூட்டத்திற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒன்றியத்திற்கு மூன்று,நான்கு பொறுப்பாளர்கள் வந்திருந்தனர்*
🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
*கூட்டத்தில் மாநில தலைவர்ரெக்ஸ் ஆனந்தகுமார்,மாநில பொருளாளர் கண்ணன்,மாநில துணைத் தலைவர் ஞானசேகரன்*
*மாநில துணைச் செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்*

