நவ.26 முதல் 28வரை மழை!

அந்தமான் கடலில் உருவாகியுள்ள
காற்றழுத்தத் தாழ்வு நிலையால் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மூன்று நாட்களுக்குத் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தது. கடந்த ஒரு வாரக் காலமாக மழை ஓய்ந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மீண்டும் மழை தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அந்தப் பகுதி முழுவதும் பரவி மேலடுக்கு சுழற்சியாக நீடிக்கிறது. இது மேற்கு மற்றும் தென்மேற்கு திசையை நோக்கி மெதுவாக நகர்ந்து, வரும் 26ஆம் தேதி தென் மேற்கு வங்க கடல் (தமிழகக் கடலோரம்) மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இதனால் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளது.

மத்தியக் கிழக்கு வங்கக் கடலில், இன்று (நவம்பர் 24) உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது தென்மேற்கு வங்கக் கடல் நோக்கி நகருகிறது. இதனால், இன்று தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் மிதமான அல்லது இடியுடன்கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...