இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் ஏர்டெல் நிறுவனம்
தனது 3ஜி சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்புச் சேவை நிறுவனமான ஏர்டெல் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி ஆகிய சேவைகளைத் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறது. இந்நிலையில் 3ஜி சேவைகளை நிறுத்திவிட்டு, 2ஜி, 4ஜி சேவைகளில் கவனம் செலுத்த ஏர்டெல் முடிவு செய்துள்ளது.
“3ஜி சேவைகளில் எங்களது முதலீடு குறைந்துவருகிறது. எனவே 2ஜி சேவைக்கு முன்பாகவே இன்னும் மூன்று முதல் நான்கு வருடங்களில் 3ஜி சேவை நிறுத்தப்படும். இந்தியாவில் தற்போது சாதாரண மொபைல் போன்கள் பயன்பாடு சற்று அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் போன்களில் 50 சதவிகிதம் சாதாரண அம்சங்கள் கொண்ட போன்களாகவே உள்ளன. 4ஜி பயன்பாடும் அதிகரித்துவருவதால் இப்பிரிவில் அதிக முதலீடு மேற்கொண்டு சேவை விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளோம். 3ஜி சேவைக்காகப் பயன்படுத்தி வரும் 2,100 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை 4ஜி சேவைக்காகப் பயன்படுத்தவிருக்கிறோம். நாட்டின் சில வட்டாரங்களில் அமைத்துள்ள 3ஜி சேவை உபகரணங்கள் 4ஜி சேவையையும் வழங்கக்கூடிய வகையிலேயே அமைத்துள்ளோம். எனினும் சில வட்டாரங்களில் இருக்கின்ற, 3ஜி சேவை மட்டுமே வழங்கக்கூடிய உபகரணங்கள் விரைவில் மாற்றியமைக்கப்படும்” என்று ஏர்டெல் நிறுவன நிர்வாக இயக்குநரான கோபால் விட்டல் கூறியுள்ளார்.
கட்டணக் குறைப்பு, சந்தையில் அதிக போட்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏர்டெல் நிறுவனம் கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 77 சதவிகித வருவாய் இழப்பைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.