தமிழக பெண்கள் குடும்ப வன்முறை தாக்குதலுக்கு ஆளாவது
அதிகமாக இருக்கிறது. 60 சதவீத பெண்கள் கணவரால் தாக்கப்படுவதாக தேசிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை:
ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தேசிய அளவில் ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தில் தமிழ்நாடு அகில இந்திய அளவில் 10-வது இடத்தில் உள்ளது. பெண்களுக்கான வறுமை ஒழிப்பு, சுகாதாரம் ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றாகவும் தமிழ்நாடு உள்ளது.
இதில், வறுமை ஒழிப்பில் 3-வது இடத்திலும், சுகாதாரத்தில் 2-வது இடத்திலும் உள்ளது.
அதே நேரத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றில் தமிழ்நாடு பின்தங்கிய நிலையில் உள்ளது. பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு 12-வது இடத்திலும், பெண் கல்வியில் 22-வது இடத்திலும் இருக்கிறது.
திருமண வயது வருவதற்கு முன்பே பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பதும் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது.
இவ்வாறு 15.7 சதவீத பெண்களுக்கு திருமண வயது வருவதற்கு முன்பு திருமணம் நடைபெறுகிறது.
தமிழக பெண்கள் குடும்ப வன்முறை தாக்குதலுக்கு ஆளாவதும் அதிகமாக இருக்கிறது. 60 சதவீத பெண்கள் கணவரால் தாக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதும் மிக குறைவாக இருக்கிறது. குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுப்பது மிக அவசியம் ஆகும். அப்போது தான் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
சில நோய்கள் தாக்குதலால் குழந்தை இறப்பு ஏற்படுவதும் தடுக்கப்படும். ஆனால், தமிழ்நாட்டில் 55.9 சதவீத குழந்தைகளுக்கு பிறந்து ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பதில்லை.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவதும் அதிகமாக இருக்கிறது. அதிலும் 99.6 சதவீத குற்றங்கள் அந்த குழந்தைகளுக்கு தெரிந்தவர்களாலேயே நடக்கிறது.
தமிழ்நாட்டில் ஆஸ்பத்திரிகளில் பிரசவம் நடப்பது அதிகரித்துள்ளது. இங்கு 99 சதவீத பெண்களுக்கு ஆஸ்பத்திரியில்தான் குழந்தைகள் பிறக்கின்றன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக சமூக நலத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.