ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே,
அப்பல்லோ டாக்டர்கள் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்களுக்கு சம்மன் அனுப்ப விசாரணை கமிஷன் முடிவு செய்துள்ளது.
விசாரணை கமிஷன்:
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. நாளை(நவ.,22) வரை புகார் அளிக்கலாம். அதற்கு பின் தரப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதனையடுத்து கமிஷன் தன் பணியை துவக்குகிறது. உயர் பதவியில் இருப்போரையும் விசாரிக்க வசதியாக, கூடுதல் அதிகாரம் கேட்டு, கமிஷன் சார்பில், அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சம்மன்:
இந்நிலையில் ஜெ., மரணம் தொடர்பாக, லண்டனிலிருந்து வந்த டாக்டர் பீலே, சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள், அப்பல்லோ டாக்டர்கள் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்களுக்கு சம்மன் அனுப்ப விசாரணை கமிஷன் முடிவு செய்துள்ளது. மேலும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் என, அனைவரையும் விசாரிக்க முடிவு செய்துள்ளது.