மழை நீடிக்கும் : வானிலை மையம்!

சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வரும்
நிலையில் அடுத்த 38 மணி நேரத்துக்குத் தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று (நவம்பர் 26) எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், ராயபுரம், மீனம்பாக்கம், ஆலந்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம்," தென் மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் இந்திய பெருங்கடல் வரை மேலடுக்கு சுழற்சி பரவியுள்ளது. இதனால் அடுத்த 38 மணி நேரத்திற்குத் தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது "என்று தெரிவித்துள்ளது.

மேலும் நவம்பர் 29 ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடலில் தமிழகம், இலங்கையையொட்டியுள்ள பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...