பள்ளி கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர்
ஜெயக்குமார், ஆசிரியரைப் போல மாணவர்களுக்குப் பாடம் நடத்தியுள்ளார்.
பாக் ஜலசந்தியில் கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள்மீது இந்தியக் கடலோரக் காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்குப் பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வரும் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் மீன்வளத்துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஜெயகுமார், ராயபுரம் மூலக்கொத்தளத்திலுள்ள மாநகராட்சிப் பள்ளியின் புதிய வகுப்பறை கட்டடத்தை நேற்று (நவம்பர் 15) திறந்து வைத்தார். பிறகு அந்தப் புதிய கட்டடத்துக்கு மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். அங்கு ஒருமணி நேர ஆசிரியராக மாறிய அவர், H20 என்பதை கரும்பலகையில் எழுதி, தண்ணீர் என்ற அதற்கான விளக்கத்தையும் அளித்தார். மேலும், ‘நல்லவனாய் இரு, நல்லதே செய்’ (Be Good, Do Good) என்பதை ஆங்கிலத்தில் 'Be good, Do good' என்று கரும்பலகையில் எழுதி, அதற்கேற்ப வாழ வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியவர் பிரான்சிஸ் டே என்று வரலாற்றுப் பாடமும் நடத்தினார். அதாவது ஒரே சமயத்தில் வரலாறும், அறிவியலையும் நடத்தினார்.
மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையே துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கும் நிலையில், அதற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் இவ்வாறும் பாடம் நடத்திக்கொண்டிக்கிறார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.