இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: வானிலை ஆய்வு மையம்!!!

வங்கக்கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது
என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.


இலங்கை அருகே தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், சென்னை மற்றும் புதுச்சேரியில் இடைவெளி விட்டு விட்டு மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்னும் இரண்டு நாள்களில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை படிப்படியாக குறையும். தென்மேற்கு வங்ககடலில் உருவாகியிருந்த காற்றழுத்தாழ்வு நிலை மெல்ல மெல்ல நகர்ந்து வலுவிழந்து வருகின்றது.

வடகிழக்கு பருவமழை வழக்கமான 23 செ.மீட்டருக்கு பதில் 1 செமீ குறைந்து 22 செ.மீ பெய்துள்ளது. இன்றும், நாளையும் இடைவெளி விட்டு விட்டு மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...