டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும்
கல்லூரிகளில் இரண்டு மாதங்களுக்குள் மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று (நவம்பர் 16) உத்தரவிட்டுள்ளது.
நிலத்தடி நீர் பாதுகாப்புக்கான தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர் மகேஷ் சந்திர சக்சேனா. இவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ‘டெல்லியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகக் குறைந்து வருகிறது. அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களின் கட்டடங்களில் மழை நீர் சேமிப்பு வசதிகள் இல்லை. எனவே, மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி சுவதந்தர் குமார் முன்பு வந்தது. அப்போது அவர், “டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகள் இரண்டு மாதங்களுக்குள் மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக கல்வி நிறுவனங்களில் ஆய்வு நடத்தக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் டெல்லி கல்வித் துறை, குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித் துறை, மத்திய நிலத்தடி நீர் ஆணையம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் இடம்பெற வேண்டும். இந்தக் குழு, மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தி கல்வி நிறுவனங்களுக்குச் சான்றிதழ் வழங்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் ஆய்வு செய்ய வேண்டும். இதைப் பின்பற்றாத நிறுவனங்களிடம் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும். இதுதொடர்பாக டெல்லியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள மழை நீர் சேமிப்பு கட்டமைப்புச் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என மகேஷ் சந்திர சக்சேனா மனு அளித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம், டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள மழை நீர் சேமிப்பு கட்டமைப்பைப் பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி குடிநீர் வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.