புதிய காற்றழுத்த தாழ்வுநிலை!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால்
வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஸ்டெல்லா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (நவம்பர் 27) சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “நேற்று (நவம்பர் 26) தென் இலங்கை மற்றும் தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று பலவீனமடைந்து தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக அரபிக்கடல் பகுதியில் உள்ளது.

மேலும், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், வரும் 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகரில் இடைவெளி விட்டு மித மழையும் சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 14 செ.மீ., மழையும், செம்பரம்பாக்கம் 12 செ.மீ., சென்னை விமான நிலையம் 10 செ.மீ., காஞ்சிபுரம் 9 செ.மீ., வேதாரண்யம் 9 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...